Friday, June 25, 2021

1. அனாபஸார காலம்


⚫❗⚫🛕🐚📿🕉️🤕🤒🩺

#அனாபஸார (#அனாவஸார) #காலம் !*

🤕 _தனிமைப்படுத்தப்படும் #பலராமன், #சுபத்திரா, #ஜகந்நாதன் !_ 🤒

புரியில் மிக முக்கியமான ஒரு காலம் இந்த *அனாபஸார (அனாவஸார/#அனாஸார) காலம் எனப்படும் #14நாட்கள் (2 வாரம்) #ஓய்வு.

ஜ்யேஷ்ட (ஆனி) பௌர்ணமி அன்று ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா மூவரும் 108குடங்கள் தீர்த்தத்தில் திருமஞ்சனம் (அபிஷேகம்) கண்டருளினார்கள். அதாவது வருடத்தில் ஒரு முறை கோவில் கர்பக்ருஹத்தில் உள்ள மூலவ விக்ரஹங்கள் வெளியில் வந்து ஸ்நான வேதியில் குளித்தலே #ஸ்னான #யாத்திரை எனப்படுகிறது.

நிறைய நேரம் தண்ணீரில் விளையாடிக் குளித்ததால், மூவருக்கும் #ஜலதோஷம், #ஜுரம் போன்றவை வந்துவிடுகின்றன.

அதனால் ஜுரமருந்து, ஜலதோஷ மருந்து எல்லாம் கொடுத்து, விசேஷ #கஷாயம் கொடுத்து, பலராமன், சுபத்திரா, ஜகந்நாதனை தனியாக ஒரு இடத்தில் ஓய்வாக இருக்கவைப்பர்.

அந்த சமயத்தில் பழச்சாறு, மருந்து கஷாயம் போன்றவையே பகவானுக்கு நிவேதனம் செய்யப்படும்.

இந்த 2 வாரம் பகவானை யாரும் தரிசிக்க இயலாது. எப்படி நாம் கொரொனா கால தனிமைப்படுத்துதல் என்று சொல்கிறோமோ, அதை பல நூறு ஆண்டுகளாக வருடா வருடம் ஜகந்நாதன் செய்து வருகிறான்.

இந்த சமயத்தில் உலகெங்கிலும் உள்ள ஜகந்நாத பக்தர்கள், தங்கள் வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உள்ள ஜகந்நாதனின் மூர்த்திகள், ஜகந்நாதன் படங்கள் ஆகியவற்றை வெள்ளை துணியிட்டு மூடி வைப்பார்கள். எத்தனை அழகான பக்திபாவம் இது !!!

ஆஷாட(ஆடி) அமாவசை வரையிலான இந்த 14 நாட்கள், பக்தர்களுக்கு கோயிலில் தரிசனம் அனுமதியில்லை. ஆஷாட (ஆடி) (சுக்லபக்ஷ) வளர்பிறை பிரதமை (முதல்நாள்) கோவில் திறக்கப்படும். ஜகந்நாதன், பலராமன், சுபத்திரா புதுப்பொலிவுடன் காட்சி தருவார்கள். அதற்கு நபயௌவன (நவ யௌவனம் - புதிய இளமை) தரிசனம் என்று ஊரே வந்து தரிசித்துக் கொண்டாடும்.

அதற்கு அடுத்த நாள் பலராமன், சுபத்திரா, ஜகந்நாதன் மூவரும், கோயிலைவிட்டு வெளியில் வந்து பக்தர்களுக்காக ரதயாத்திரை செய்வார்கள். அதுதான் உலகில் பிரசித்தி பெற்ற *புரி ரத யாத்திரை* !

ஹே ஜகந்நாதா !
ஹே பலராமா !
ஹே சுபத்திரா !
நன்றாக ஓய்வு எடுங்கள் !
புதிய அழகோடு எங்களுக்கு சீக்கிரம் அனுக்ரஹம் செய்யுங்கள் !

ஜெய் ஜகந்நாத் !
ஜெய் பலராம் !
ஜெய் சுபத்திரா !

குருஜீ கோபாலவல்லிதாஸன்
25.6.21, வெள்ளி

⚫❗⚫🛕🐚📿🕉️🤕🤒🩺

0 comments:

Post a Comment

 

Visesha Vedham Copyright © 2008 Black Brown Art Template by Ipiet's Blogger Template